தேர்தல் சட்டம் மாற்றப்பட வேண்டும் : இம்முறை 24% பேர் வாக்களிக்கவில்லை - CMEV

Rihmy Hakeem
By -
0


புதிய பாராளுமன்றத்தின் மிக முக்கியமான  செயற்பாடுகளில் ஒன்றாக இருக்க வேண்டியது தேர்தல் சட்டத்தை மாற்றுவதாகும் என்று தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையத்தின் (CMEV) தேசிய ஒருங்கிணைப்பாளர் மஞ்சுள கஜநாயக தெரிவித்தார்.

கடந்த தேர்தலின்போது வாக்காளர்கள் தமது வாக்குகளை பயன்படுத்திய விதம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

வரலாற்றிலேயே அதிகமான வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டிருப்பது இம்முறை நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஆகும். அதாவது 2019 ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பின் படி ஒரு கோடியே 62 லட்சத்து 63 ஆயிரத்தி 880 பேர் ( 16,263,880 ). என்றபோதிலும் இங்கே தமது வாக்குகளை பயன்படுத்தி இருப்பது ஒரு கோடியே 23 லட்சத்தி 42 ஆயிரத்து முன்னூற்று தொண்ணூற்றி இரண்டு பேர் ஆகும். (12,342,392) அதனடிப்படையில் 39 லட்சத்து 21 ஆயிரத்து 493 பேர் இம்முறை தமது வாக்குகளை பயன்படுத்தவில்லை என்பது உறுதியாகின்றது. அதாவது 24.11% வீதமானோர் தமது வாக்குகளை பயன்படுத்தவில்லை. இது மிகவும் பாரதூரமானதொரு விடயமாகும். அத்துடன் நிராகரிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை ஏழு லட்சத்தி 44 ஆயிரத்து முன்னூற்றி எழுபத்தி மூன்று. இத்தொகை சதவீத அடிப்படையில் 6.03% ஆகும்.

கடந்த 16 தேர்தல்களையும் நோக்கினால் வெறுமனே இரண்டு தேர்தல்களில் மாத்திரம் தான் இந்த அளவு வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளன. எனவே எதிர்காலத்தில் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வூட்டும் செயற்திட்டங்களை தேர்தல் ஆணைக்குழு, அரசியல் கட்சிகள் மற்றும் ஏனைய சுயாதீன அமைப்புக்கள் மேற்கொள்ள வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

  சபீர் மொஹமட்,                                       தேர்தல் வன்முறைகளை கண்காணிக்கின்ற நிலையம் - CMEV

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)