விடயதானத்தின் அடிப்படையில் நாட்டை அபிவிருத்தி செய்யக்கூடிய வகையில் இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் அமைச்சர்கள் புதிய அரசாங்கத்தில் நியமிக்கப்பட்டிருப்பதாக இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
கிரிக்கெட் விளையாட்டு மாத்திரமன்றி நாட்டில் அனைத்து விளையாட்டு துறைகளையும் ஊக்குவிப்பதே நோக்கமாகும் என்று இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தமது அமைச்சுக்கான சத்தியப்பிரமாணத்தை அடுத்து கண்டியில் ஊடகவியலாளர் மத்தியில் கருத்து தெரிவிக்கையிலேவே இவ்வாறு குறிப்பிட்டார்.
நேற்று நடைபெற்ற இந்த நிகழ்வில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் சௌபாக்கிய தொலைநோக்கு கொள்கைக்கு அமைவாக தற்பொழுது உள்ள உலகளாவிய நெருக்கடிக்கு மத்தியில் நாட்டை கட்டியெழுப்புவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் ஆகியோரைப் போன்று ஆளும் தரப்பு உள்ளிட்ட அனைவரும் நாட்டை மேம்படுத்துவதற்கு பணியாற்றுவார்கள் என்று நான் எதிர்பார்க்கின்றேன். எதிர்கட்சியும் தனது பணிகளை நிறைவேற்றும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர் நாட்டில் கிரிக்கெட் விளையாட்டுக்கே முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது.
விளையாட்டுத் துறை அமைச்சர் என்ற ரீதியில் நியமிக்கப்பட்டுள்ள எனக்கு தனியே கிரிக்கெட் விளையாட்டை மாத்திரம் மேம்படுத்துவது நோக்கமல்ல. கிரிக்கெட்டிற்கு என நிர்வாக சபை ஒன்று உண்டு. அனைத்து விளையாட்டுக்கள் தொடர்பிலும் மறுசீரமைப்புக்கள் மேற்கொள்ளப்படவேண்டும். சம்பந்தப்பட்ட விளையாட்டு சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களது பிரச்சினைகள் குறைபாடுகளை தீர்த்து தேவையான உதவிகள் வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.