ஏறாவூர் படுகொலைக்கு 30 ஆண்டுகள் : எத்தனை ஆண்டுகள் கழிந்தாலும் துயரத்தில் இருந்து மீள முடியாது - நஸீர் அஹமட் MP

Rihmy Hakeem
By -
0


 1990ம் ஆண்டு ஆகஸ்ட் 12ம் திகதி நள்ளிரவில் ஏறாவூர் மண்ணில் நடந்த கொடுமை எத்தனை ஆண்டுகள் கழிந்தாலும் அதிலிருந்து மீள முடியாது. 

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ZA.நஸீர் அகமட் தெரிவிப்பு ...

1990ஆம் ஆண்டு இலங்கையின் கிழக்கே ஏறாவூர் பிரதேசத்தில் விடுதலைப்புலிகளினால் நடத்தப்பட்ட தாக்குதலின் 30வது ஆண்டு உள்ளூர் முஸ்லிம்களினால் இன்று புதன்கிழமை நினைவு கூறப்படுகின்றது.

1990ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 11ம் தேதி நள்ளிரவு இடம்பெற்ற இக்கோர சம்பவத்தில் பெண்கள், குழந்தைகள் உட்பட 121 பேர் கொல்லப்பட்டார்கள். பலர் காயமடைந்தனர்.

விடுதலைப்புலிகள் நடாத்திய கொடூரம் ஆண்கள் பெண்கள் பெரியவர்கள் சிறியவர்கள் ஏன் கர்ப்பிணி தாய்மார்களையும் ஈவி இரக்கமின்றி கொடூரமாக வெட்டியும் துப்பாக்கிச் சூடு நடாத்தியும் படுகொலை செய்தார்கள்.அன்று நள்ளிரவு வேளை ஏறாவூர் ஒட்டுப்பள்ளி பிரதேசம் தொடக்கம் சதாம் குசைன் கிராமம் வரை ஜனாஸாக்கள்  பரவிக்கிடந்தன.

இவ்வாறான கொடூர நிகழ்வு பல தசாப்தங்கள்

கடந்தாலும் நீங்காத வடுக்கலாக ஒவ்வொருவரது மனதிலும் உறங்கிக்கிடக்கின்றது.

இத்தருணத்தில்  எல்லாம் வள்ள இறைவன் சஹீதாக்கப்பட்ட உறவுகளுக்கு உயர்ந்த சுவனத்தை வழங்கிட வேண்டும் என்று பிரார்தனை செய்தவனாக 

உறவுகளை இழந்து 30வருடங்கள் கடந்தும்  நினைவு கூறிக்கொண்டிருக்கும் எமது பிரதேச மக்களுக்கு வள்ள இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாக இருகரம் ஏந்தி பிரார்த்திகின்றேன்...

இனி வரும் காலங்களில்  இனங்களுக்கிடையிலான ஒற்றுமையை கருத்தில் கொண்டு வருங்கால சந்ததியினரின் மனதில் இனமத ஒற்றுமைகளை விதைத்து இவ்வாறான கொடூர சம்பவங்கள் தொடர விடாமல் இறைவன் துணைபுரிய வேண்டியவனாக....

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)