தோல்வியடைந்தவர்களுக்கு தேசியப்பட்டியல் இல்லை

Rihmy Hakeem
By -
0

தேர்தலில் தோல்வியுற்ற எந்த ஒரு நபருக்கும் கட்சியின் தேசியப் பட்டியலில் வாய்ப்பு வழங்கப்பட மாட்டாது என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.


இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சக்திமிக்க பயணம் ஒன்று ஆரம்பித்துள்ளதாகவும் இந்த சக்தியே எதிர்வரும் காலத்தில் நாட்டின் பொறுப்பை ஏற்க போக்கும் சக்தி எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜனநாயக வரலாற்றில் குறைந்த காலத்தில் இவ்வளவு மக்கள் சக்தி ஒன்றிணைந்து ஒரே அரசியல் கட்சி ஐக்கிய மக்கள் சக்தி எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)