பாடசாலைகள் நாளை மீண்டும் திறக்கப்படுகின்றன

www.paewai.com
By -
0


நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளினதும் கல்வி நடவடிக்கைகள் நாளை ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

தரம் 5, 10, 11, 12 மற்றும் தரம் 13 ஆகியவற்றுக்கான கல்வி நடவடிக்கைகள் வாரத்தில் ஐந்து நாட்களும் முன்னெடுக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏனைய வகுப்புக்களுக்கான கல்வி நடவடிக்கைகள் கட்டம் கட்டமாக முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

200 மாணவர்களுக்கு குறைந்த பாடசாலைகளில் சாதாரணமாக 5 நாட்களும் கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கபடவுள்ளதுடன் 200 மாணவர்களுக்கு அதிகான பாடசாலைகளில் ஒவ்வொரு வகுப்புகளாக கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கபடவுள்ளது.

200 மாணவர்களுக்கு அதிகமான பாடசாலைகளில் முதலாம் மற்றும் 5 ஆம் தர வகுப்புக்களின் கல்வி நடவடிக்கைகள் திங்கட் கிழமையும், 2 ஆம் மற்றும் 5 ஆம் தர வகுப்புக்களின் கல்வி நடவடிக்கைகள் செவ்வாய் கிழமையும், 3 ஆம் மற்றும் 5 ஆம் தர வகுப்புக்களின் கல்வி நடவடிக்கைகள் புதன் கிழமையும் இடம்பெறவுள்ளது.

அத்துடன் வியாழன் மற்றும் வெள்ளி கிழமைகளில் 4 ஆம் மற்றும் 5 ஆம் தர வகுப்புக்களின் கல்வி நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளது.

மேலும் 6 ஆம் தரம் முதல் 13 ஆம் தர வகுப்புக்களின் கல்வி நடவடிக்கைகள் திங்கட் கிழமையும், 7 ஆம் தரம் முதல் 13 ஆம் தர வகுப்புக்களின் கல்வி நடவடிக்கைகள் செவ்வாய் கிழமையும், 8 ஆம் தரம் முதல் 13 ஆம் தர வகுப்புக்களின் கல்வி நடவடிக்கைகள் புதன் கிழமையும் இடம்பெறவுள்ளது.

அத்துடன் வியாழன் மற்றும் வெள்ளி கிழமைகளில் 9 ஆம் தரம் முதல் 13 ஆம் தர வகுப்புக்களின் கல்வி நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளது.

6, 7, 8 மற்றும் 9 ஆம் தர வகுப்புக்கள் காலை 7.30 முதல் 1.30 வரையிலும் 10 முதல் 13 ஆம் ஆண்டு வரையில் 7.30 முதல் 3.30 வரையிலும் கல்வி நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளது.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)