த.தே.கூ. தேசியப் பட்டியல் விவகாரத்தினால் கட்சிக்குள் பிளவு!

www.paewai.com
By -
0


தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் அம்பாறைக்கு

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் ஒரேயொரு தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவி, கிழக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினரும் நாவிதன்வெளி பிரதேசசபை தவிசாளருமான தவராசா கலையரசனுக்கு வழங்கப்பட்டுள்ளது.

பாராளுமன்றத் தேர்தலில் வேட்பாளராக களமிறங்கிய தவராசா கலையரசனின் பெயரை சிபாரிசு செய்து, தேர்தல் ஆணைக்குழுவிற்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, இலங்கை தமிழரசுக் கட்சியின் செயலாளர் கே. துரைராஜசிங்கம் உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளார்.


மட்டக்களப்பு நல்லையா வீதியிலுள்ள இலங்கை தமிழரசு கட்சியின் காரிலயத்தில் இன்று (11) ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாள் சந்திப்பில் இவ்வறிவித்தலை அவர் விடுத்துள்ளார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த அவர்,

தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு தேசிய பட்டியல் ஆசனம் ஒன்று கிடைத்துள்ளது. இதனை யாருக்கு வழங்குவது என பல்வேறு கருத்துப் பரிமாற்றப்பட்டது. இருந்தபோதும் தேர்தல் ஆரம்பிப்பதற்கு முன்னர் தேசியப் பட்டியல் தயாரிக்கும் போது சிலருக்கு கொடுக்கப்படவேண்டும் என்று இருந்தது.

இருந்தபோதும் இப்போது இருக்கின்ற நிலமையிலே ஏற்கனவே ஏற்படுத்திக் கொண்ட உடன்பாடுகளுக்கு அப்பால் சென்று செயற்பட வேண்டியதன் அவசியம் இருக்கின்றது.  ஆகவே இதில் சம்மந்தப்ப ட்டவர்களை அழைத்து இந்த விடயங்களை தெரிவித்தோம் அதனை அவர்கள் ஏற்றுக் கொண்டிருக்கின்றனர்.

இதற்கமைய நேற்று (08) சனிக்கிழமை சம்பந்தன் ஜயா வீட்டில் சந்திப்பு இடம்பெற்றது. இதன்போது தலைவருக்கு சில அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு இதற்கமைய தேசிய பட்டியலை அம்பாறையிலுள்ள அந்த மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவருக்கு வழங்க வேண்டும் என்பதற்கமைய முடிவின் பிரகாரம்  இன்று ஞாயிற்றுக்கிழமை (11) காலை நான் அம்பாறை மாவட்ட த்தைச் சேர்ந்த முன்னாள் கிழக்கு மாகாண சபையைச் உறுப்பினரும் முன்னாள் நாவிதன்வெளி தவிசாளருமான தவராசா கலையரசன் பெயரை  பரிந்துரை செய்து  தேசிய தேர்தல் ஆணைக்குழுவிற்கு உடனடியாக அனுப்பி வைத்துள்ளேன். என அறிவித்தார்.


தேசியப் பட்டியல் ஆசன தெரிவு தன்னிச்சையானது- சித்தார்த்தன் கடும் எதிர்ப்பு!


தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு கிடைத்துள்ள தேசியப் பட்டியல் ஆசன பிரிதிநிதி தன்னிச்சையாக தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக பங்காளிக் கட்சிகளில் ஒன்றான புளொட் அமைப்பின் தலைவர் த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

தேசியப் பட்டியல் ஆசன தெரிவு தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவுக்கும் பங்காளிக்கட்சிகளாக புளொட் மற்றும் ரெலோ கட்சிகளுக்கும் அறிவிக்கப்படாமலேயே முடிவெடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை அவர் நடத்திய ஊடக சந்திப்பிலேயெ இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் ஆசனம் அம்பாறை, நாவிதன்வெளி பிரதேச சபையின் தவிசாளர் தவராசா கலையரசனுக்கு வழங்கப்படுவதாக தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராஜசிங்கம் இன்று காலை அறிவித்திருந்தார்.

இந்நிலையில், குறித்த முடிவு ஒட்டுமொத்த தமிழ் தேசியக் கூட்டமைப்பினரின் முடிவு இல்லையெனவும் தமக்கு அறிவிக்கப்படாமல் இவ்வாறு முடிவு எடுக்கப்பட்டமைக்கு கடும் நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் சித்தார்த்தன் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, குறித்த தேசியப் பட்டியல் ஆசனத்தை மாவை சேனாதிராஜாவுக்கு வழங்குவதே சிறப்பானது எனவும், இதுகுறித்து பரிந்துரைக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)