தேசியப்பட்டியல் உறுப்பினரை நியமிக்கும் அதிகாரம் என்னிடமே உள்ளது, தேவை ஏற்படின் நீதிமன்றத்தையும் நாடலாம் - ரத்ன தேரர்

Rihmy Hakeem
By -
0


தேசிய பட்டியல் உறுப்பினரை நியமிக்கும் அதிகாரம் தன் வசமே உள்ளதாக அத்துரலியே ரதன தேரர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (13) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார்.

இதன்போது கருத்து தெரிவித்த அவர், அபே ஜன பல கட்சியின் அதிகாரபூர்வமாக ஒப்பந்தத்தின் ஊடாக தேசிய பட்டியல் உறுப்பினரை நியமிக்கும் அதிகாரம் தனக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இவ்வாறான சூழ்நிலையில் பிரச்சினையை தீர்த்துக் கொள்வதற்காக வெவ்வேறு தரப்பினரால் மேற்கொள்ளப்படும் அழுத்தங்கள் காரணமாக நீதிமன்றம் சென்று பிரச்சினையை தீர்த்துக் கொள்ளுதல் பொருத்தமான ஒரே நடவடிக்கையாக இருக்கும் என அவர் தெரிவித்தார்.

அபே ஜனபல கட்சியின் செயலாளராக கூறப்படும் வெதினிகம விமலதிஸ்ஸ தேரரால் குறித்த பாராளுமன்ற உறுப்பினர் பதவியை கோரி தேர்தல் ஆணைக்குழுவிற்கு கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்ட போதும், நெருக்கடிக்கு மத்தியில் ஞானசார தேரரின் பெயரிடப்பட்டுள்ளமையினால் பல பிரச்சினைகள் உருவெடுததுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

Adaderana

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)