இன்றைய தினம் 409 பேருக்கு கொவிட் தொற்று!

Rihmy Hakeem
By -
0

 திவுலபிடிய / பேலியகொடை கொத்தணியில் புதிதாக 137 பேருக்கு கொவிட் தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர்களில் 05 பேர் தனிமைப்படுத்தலில் இருப்பவர்கள் எனவும், 132 பேர் தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் எனவும் தெரியவருகிறது.

இன்றைய தினம் (03) 409 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதுடன் திவுலபிடிய / பேலியகொடை கொத்தணி தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 8266 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)