கொரோனாவை ஒழிப்பதற்கு கடலில் பாய்ந்து இறப்பதற்கும் தயார் : பேஸ்புக் விமர்சனங்களுக்கு பாராளுமன்றில் பதிலடி கொடுத்த பவித்ரா!

Rihmy Hakeem
By -
0

 


நாட்டில் பரவிவரும் கொரோனா வைரஸை ஒழிப்பதற்கு தான் கடலுக்கு பலியாகவும் தயாராகவிருப்பதாக, சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அண்மையில் தான் கலந்துகொண்ட சமய நிகழ்வு ஒன்று தொடர்பில், சிலர் கேலிக்குட்படுத்துவதாக தெரிவித்துள்ள அவர், கொரோனா ஒழிப்புக்காக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் எவ்விதத்திலும் அரசியல்மயமாக்கப்படாது என்றும், சுகாதார பிரிவுகளுக்கு முதன்மை இடமளிக்கப்படும் என்றும் சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.


கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)