தப்பிச் சென்ற பேலியகொடை மீன் சந்தை தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டனர்!

Rihmy Hakeem
By -
0

 


கொவிட் தொற்றுக்குள்ளான பேலியகொடை மீன் சந்தை தொகுதியின் அலுவலக ஊழியர்கள் நான்கு பேர் இன்று (07) பொலன்னறுவை மின்னேரியா பிரதேசத்தில் வைத்து கண்டு பிடிக்கப்பட்டனர்.

முகத்துவாரம் பகுதியில் 07 நபர்களுக்கு கடந்த தினம் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் குறித்த முடிவுகள் வருவதற்கு முன்னர் குறித்த நபர்கள் எவருக்கும் அறிவிக்காமல் பொலன்னறுவை, மின்னேரியா மீன்பிடி கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான விடுதி ஒன்றுக்கு மீன்பிடி கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான வாகனமொன்றில் வந்துள்ளனர்.

கிராமவாசிகள் வங்கிய தகவல் ஒன்றிற்கு அமைய குறித்த இடம் சுகாதார பிரிவினரால் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது இவர்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் 4 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(அததெரண)

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)