புத்தளம் நகர சபை தலைவர் கே.ஏ. பாயிஸின் மரணம் தொடர்பில் அவருடைய சாரதி மற்றும் கெப்பில் பயணித்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
பொலிஸார் மேற்கொண்ட பரிசோதனையில் அவர்கள் மது அருந்தியிருந்தமை தெரியவந்துள்ளது.
நகர சபை தலைவர் பாயிஸ் சிலருடன் ரால்மடம குளத்தில் குளித்துவிட்டு வாகனத்தில் பின்னர் அமர்ந்து சென்ற சந்தர்ப்பத்தில் வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டடோ அல்லது வேறு முறையிலோ விபத்துக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று மாலை 5.30 - 6.30 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் பூரண விசாரணை ஒன்றை ஆரம்பித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.