வட்சப், வைபர் போன்ற App இனை உருவாக்கி சாதனை படைத்த இலங்கை மாணவன்! (இணைப்பு)

Rihmy Hakeem
By -
0

 


(பிரதீபன்)

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் தரம் 10 இல் கல்வி கற்கும் நக்கீரன் மகழினியன் என்ற 15 வயது மாணவன் வட்சப் மற்றும் வைபர் ஆகிய செயலிகளுக்கு இணையான புதிய வகை செயலி ஒன்றை கண்டுபிடித்துள்ளார்.

mSQUAD என்ற செயலி தொலைத் தொடர்பாடல் துறையில் ஒரு முக்கியமான செயலியாக தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சிறுவயதில் இருந்தே மென்பொருள் விஞ்ஞானியாக வர வேண்டும் என்று தனது கல்வியைத் தொடர்ந்த இந்த மாணவன் கடந்த ஒரு மாத காலமாக நாட்டில் ஏற்படுத்தப்பட்டிருந்த பயணத் தடையினை சிறந்த முறையில் பயன்படுத்தி வீட்டில் இருந்து இந்த புதிய செயலியை கண்டுபிடித்துள்ளார்.

மிகத்துல்லியமான முறையில் படங்கள் மற்றும் வீடியோக்கள் மற்றும் தரவுகளை இதனூடாக நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும் என்பதுடன் இந்த செயலி மிகவும் அதிவிரைவு தன்மை கொண்டதாகவும் காணப்படுகின்றது.

60 MB அளவு மெகாபைட் கொண்ட இந்த மென்பொருளினை இணைய உலாவிகள் பிளேஸ்டோர் மூலமும் தரவிற்றம் செய்து கொள்ள முடியும்.

குறித்த மென்பொருளை இதுவரை ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் பதிவிறக்கம் செய்துக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. (Siyane News)


கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)