குவைத் நாட்டு தனவந்தர் அஹ்மத் ஸாலிஹ் அல் கந்தரியின் நிதியுதவியில், அல் ஹிமா இஸ்லாமிய சேவைகள் நிறுவனத்தின் ஒருங்கிணைப்பில் கம்பஹா கல்வி வலயத்திற்கு உட்பட்ட உடுகொட அறபா மகா வித்தியாலயத்தில் கட்டப்பட்ட புதிய வகுப்பறைக்கட்டடத்தின் மேல்மாடிப்பகுதியின் திறப்பு நிகழ்வு இன்று (11) பாடசாலையில் நடைபெற்றது.
பாடசாலையின் அதிபர் எம்.எம்.ஏ.அலீம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக இலங்கைக்கான குவைத் தூதுவர் சார்பில் தூதரக அதிகாரியான எம்.எம்.எம்.பிர்தவ்ஸ் (நளீமி) கலந்து சிறப்பித்தார்.
விஷேட அதிதியாக அல் ஹிமா இஸ்லாமிய சேவைகள் நிறுவனத்தின் பணிப்பாளர் நூருல்லாஹ் (நளீமி) கலந்துகொண்டதுடன், பிரமுகர்கள், பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது. (Siyane News)
படங்கள் - அஷ்ரப் ஏ சமத்
கீழ்மாடி திறப்பு நிகழ்வு தொடர்பான செய்தி - http://www.siyanenews.com/2019/02/blog-post_544.html