2021 உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த சற்றுமுன் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
அத்துடன் 2022ஆம் ஆண்டுக்கான உயர்தரப்பரீட்சை ஒரு மாதம் ஒத்திவைக்கப்படும், தற்போதைய நிலையை கருத்தில் கொண்ட இந்த தீர்மானம் எடுக்கப்படலாம், விரைவில் அது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு அறிவிக்கப்படும் எனவும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.