( ஐ. ஏ. காதிர் கான் )
முன்னாள் மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர், ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா இன்று ( 02.07.2022 ) சனிக்கிழமை, தனது 53 ஆவது அகவையில் காலடி எடுத்து வைக்கின்றாா்.
முன்னாள் அமைச்சா் தனது ஆரம்பக் கல்வியை, கொழும்பு ரோயல் கல்லுாாியில் கற்றுத் தோ்ந்தாா். பின்பு இலங்கை சட்டக் கல்லுாாியில் சட்டப் படிப்பைக் கற்று மிகச் சிறந்த சட்டத்தரணியாக விளங்கினாா்.
பைஸர் முஸ்தபாவின் முதன் முதல் அரசியல் அங்கீகாரம் மறைந்த அமைச்சா் ஆறுமுகன் தொண்டமான் ( இலங்கை தொழிலாளா் காங்கிரஸ் ), அவா் வீடமைப்பு அமைச்சராக இருந்த காலத்தில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் உப தலைவராக இருந்தார். பின்னா், இலங்கை தொழிலாளா் காங்கிரஸ் மலையக மக்களின் அதி கூடிய வாக்குகள் பைஸர் முஸ்தபாவுக்கு அளிக்கப்பட்டு, அக் கட்சியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக்கிய பெருமை, மறைந்த ஆறுமுகன் தொண்டமானைச் சாரும்.
கண்டியில் 1969.07.02 ஆம் திகதி பிறந்து 2004 ஆம் ஆண்டு கண்டியில் ஹாரிஸ்பத்துவ தொகுதியில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளராக இணைந்து கொண்டாா்.
பின்பு, இப்பிரதேசத்தில் அரசியலில் நுழைந்து தோ்தலிலும் போட்டியிட்டு வெற்றியீட்டினாா்.
முன்னாள் அமைச்சா் பைஸர் முஸ்தபா, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் விசேட பணிப்பின் பேரில், ஜனாதிபதி சட்ட ஆலோசகராகவும் 2015 ஆம் ஆண்டு முதல் செயற்பட்டு வந்தாா்.
அரசியல் நட்சத்திரங்களில் மிகப் பிரல்பல்யம் பெற்று, தற்போது அரசியல் அரங்கில் பிரகாசித்து வரும் முன்னாள் அமைச்சா், தனது அரசியல் பயணத்தை மிகச் சாதுரியமாக உத்வேகத்துடன் தற்போதும் கூட முன்னெடுத்துச் செல்கின்றாா்.
தற்பொழுது ஸ்ரீல.சு.கட்சியின் மத்திய கொழும்பு அமைப்பாளராகவும் செயற்பட்டு வருகின்றாா்.
பிரதியமைச்சர், இராஜாங்க அமைச்சா், கபினட் அமைச்சா் என பல பதவிகளை வகித்து, அவற்றைத் திறமையாக முன்னெடுத்துச் சென்ற அனுபவம் அவருக்குண்டு. ஒரேயொரு சகோதரியான சட்டத்தரணி பாத்திமா பாயிஸாவின் அன்புச் சகோதரனாக விளங்கம் முன்னாள் அமைச்சா் பைஸர் முஸ்தபா, இரு புதல்விகளான பாத்திமா அமீனா, பாத்திமா ஆயிஷா ஆகியோரின் அன்புத் தந்தையாகவும் திகழ்ந்து வருகின்றாா்.
இவரது மனைவியான பாத்திமா ரிபா என்பவரும் சிறந்த சட்டத்தரணிகளில் ஒருவா் ஆவாா்.
இவர், முன்னாள் இலங்கை வங்கியின் தலைவராகச் செயற்பட்ட மறைந்த மர்ஹூம் ஜெஹான் காசிம் உடைய புதல்வியும் ஆவாா்.
முன்னாள் அமைச்சா் பைஸர் முஸ்தபா, "மக்கள் நாயகி" பாத்திமா அமீனா - ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா ஆகியோரின் சிரேஷ்ட புதல்வரும் ஆவாா்.
( ஐ. ஏ. காதிர் கான் )

