நாடுமுழுவதும் உள்ள தங்களது எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருளை விநியோகிக்க நடவடிக்கை - லங்கா ஐ.ஓ.சி

  Fayasa Fasil
By -
0

மேலதிக எண்ணெய் தாங்கி ஊர்திகள் மூலம், நாடுமுழுவதும் உள்ள தங்களது எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருளை விநியோகிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இன்றைய தினம் நாட்டிலுள்ள சகல ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் எரிபொருளை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான அறிவிப்பு தங்களுக்கு விடுக்கப்பட்டதாக தனியார் தாங்கி ஊர்தி உரிமையாளர் சங்கம் முன்னதாக தெரிவித்திருந்தது.

நேற்றைய தினம் சுமார் 150 ஐ.ஒ.சி எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகிக்கப்பட்டதாக அந்த சங்கத்தின் பிரதான செயலாளர் சாந்த சில்வா தெரிவித்துள்ளார்.

எரிபொருளைக் கொள்வனவு செய்வதற்காக, லங்கா ஐ.ஒ.சி எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் மக்கள் தொடர்ந்தும் நீண்ட வரிசைகளில் காத்திருக்கின்றனர்.

கனியவள கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்களில், எரிபொருள் விநியோகிக்கப்பட மாட்டாது என மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தையடுத்து ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையங்களை மக்கள் நாடுகின்றனர்.


கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)