தற்போது மருந்துப்பற்றாக்குறை காணப்படுகின்ற போதிலும் அதிர்ஷ்டவசமாக ஒரு மருந்து இல்லாவிடினும் மாற்று மருந்து உள்ளது என்று அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் ஹரித அலுத்கே தெரிவித்தார்.
பிரதமர் ரணிலுடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
எனினும் இதனை எதிர்வரும் இருவாரங்களில் முறையாக நிர்வகிக்காவிடின் நோயாளிகள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டாலும் மருந்து இல்லாமல் மரணிக்கலாம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

