அமைச்சர் நஸீர் அஹமட் தலைமையில் ஹஜ் குழு ஜித்தா பயணம்;
ஏற்பாடு செய்த தரப்புக்கு நன்றி தெரிவிப்பு
சுற்றாடல்துறை அமைச்சர் நஸீர் அஹமட் தலைமையிலான ஹஜ் குழுவினர் இன்று புனித ஹஜ் கடமையை நிறை வேற்றுவதற்காக ஜித்தா புறப்பட்டனர். இக்குழுவில், பாராளுமன்ற உறுப்பினர் மர்ஜான் பழீல், முஸ்லிம் கலாசாரத் திணைக்களப் பணிப்பாளர் இப்ராஹிம் சாஹிப் அன்ஸார் மற்றும் ஹஜ்குழு தலைவர் அஹ்காம் உவைஸ் ஆகியோர் உள்ளடங்கியிருந்தனர்.
மூன்று வருடங்களின் பின்னர், பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் இலங்கை முஸ்லிம்களுக்கு புனித ஹஜ் செல்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, கலாசார அமைச்சர் விதுர விக்ரமநாயக மற்றும் அரசாங்கத்துக்கும் அமைச்சர் நஸீர் அஹமட் நன்றி தெரிவித்துள்ளார்.
இரண்டு வருடங்களின் பின்னர், உலக முஸ்லிம்கள் பரந்தளவில் ஹஜ் செய்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்திய சவூதி அரேபி ய அரசாங்கத்துக்கும் அமைச்சர் நன்றி தெரிவித்தார்.
ஜித்தா சென்ற இக்குழுவினரை தூதுவர் ஹம்ஸா வரவேற்றார்.

