இந்தியா-இங்கிலாந்து தொடர்: இங்கிலாந்து அணி வீரர்கள் பட்டியல் அறிவிப்பு.

  Fayasa Fasil
By -
0


இந்தியாவிற்கு எதிராக விளையாட உள்ள இங்கிலாந்து அணி வீரர்களின் பெயர்களை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்  அறிவித்துள்ளது.

இந்திய அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாட உள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான டி20 போட்டிகள் வருகிற ஜூலை 7 முதலும், ஒரு நாள் போட்டிகள் ஜூலை 12 முதலும் தொடங்க உள்ளன. 

இந்தியாவிற்கு எதிரான டி20 மற்றும் ஒரு நாள் தொடர் ஆகிய இரண்டிலுமே இங்கிலாந்து அணியின் கேப்டனாக ஜோஸ் பட்லர் செயல்படுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்தியா-இங்கிலாந்து அணிகள் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் 5வது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகின்றன.

இந்நிலையில், இந்தியாவிற்கு எதிராக விளையாட உள்ள இங்கிலாந்து அணி வீரர்களின் பெயர் பட்டியலை அந்த நாடு அறிவித்துள்ளது.

இங்கிலாந்து டி20 அணி:  ஜோஸ் பட்லர் (கேப்டன்), மொயின் அலி, ஹாரி ப்ரூக், சாம் கரன், ரிச்சர்டு கிளீசன், கிறிஸ் ஜோர்டான், லயம் லிவிங்ஸ்டன், டேவிட் மலன், தைமல் மில்ஸ், மேத்யூ பர்கின்சன், ஜேசன் ராய், பில் சால்ட், ரீஸ் டாப்ளே, டேவிட் வில்லி.

இங்கிலாந்து ஒரு நாள் அணி: ஜோஸ் பட்லர் (கேப்டன்), மொயின் அலி, ஜோனாதன் பேர்ஸ்டோ, ஹாரி ப்ரூக், பிரிடான் கார்ஸ், சாம் கரன்,லயம் லிவிங்ஸ்டன், கிரெய்க் ஓவர்டன்,மேத்யூ பர்கின்சன், ஜோ ரூட்,ஜேசன் ராய், பில் சால்ட், பென் ஸ்டோக்ஸ், ரீஸ் டாப்ளே, டேவிட் வில்லி.

*டெஸ்டில் அதிக விக்கெட்: டாப் 10-ல் இடம் பிடித்த நாதன் லயன்.*



நாதன் லயன் 108 டெஸ்ட் போட்டிகள் விளையாடி 436 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

அஸ்வின் 442 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார்.

ஆஸ்திரேலியா அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. டி20 தொடரை ஆஸ்திரேலியா அணியும் ஒருநாள் தொடரை இலங்கை அணியும் கைப்பற்றினர். இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் போட்டி நடந்தது.

இதில் ஆஸ்திரேலியா அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா அணியின் சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தினார்

. அவர் முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டும் இரண்டாவது இன்னிங்சில் 4 விக்கெட்டும் கைப்பற்றினார். 9 விக்கெட்டுகள் கைப்பற்றியதன் மூலம் அதிக டெஸ்ட் விக்கெட்டுகள் எடுத்தவர்கள் பட்டியலில் அவர் 10-வது இடத்தை பிடித்தார்.

நாதன் லயன் 108 டெஸ்ட் போட்டிகள் விளையாடி 436 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 20 முறை 5 விக்கெட்டுகளையும் 3 முறை 10 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்

. இவர் இன்னும் 7 விக்கெட்டுகள் வீழ்த்தினால் இந்திய வீரர் அஸ்வினை பின்னுக்கு தள்ளுவார். அஸ்வின் 442 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)