க.பொ.த உயர்தர பரீட்சைப் பெறுபேறு வரும் ஆகஸ்ட் இல் வெளியிட உத்தேசம்

  Fayasa Fasil
By -
0

கல்வி பொது தராதர உயர்தர பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.

இதற்கமைவாக, 2021ஆம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தர பரீட்சையின் பெறுபேறுகளை இம்மாத இறுதியில் அல்லது ஓகஸ்ட் மாதத்தின் முதல் 2 வாரங்களுக்குள் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் L.M.D. தர்மசேன தெரிவித்துள்ளார்.

2021 ஆம் ஆண்டிற்கான க.பொ.த. உயர்தர பொறியியல் தொழில்நுட்ப பிரயோக பரீட்சைகள் தற்போது இடம்பெற்று வருகின்றன. பிரயோக பரீட்சைகள் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.



கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)