இலங்கைக்கு வருகை தரவுள்ள எரிபொருள் தாங்கிக் கப்பல்கள்

  Fayasa Fasil
By -
0

மொத்தம் 90,000 மெட்ரிக் டன் டீசல் மற்றும் பெற்றோல் தாங்கிய மூன்று கப்பல்கள் இலங்கைக்கு வருகை தரவுள்ளன.

ஒவ்வொன்றும் தலா 30,000 மெட்ரிக் டன் எரிபொருளை தாங்கி வருகைதரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, முதலாவது கப்பல் ஜூலை 13 முதல் 15ஆம் திகதிக்குள்ளும், 2ஆவது கப்பல் ஜூலை 29 முதல் 31ஆம் திகதிக்குள்ளும், 3ஆவது கப்பல் ஓகஸ்ட் மாதம் 15ஆம் திகதியன்றும் வருகை தரும் என லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)