(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
The Legend College இனால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கான The Legend Premier league -2022 கிரிக்கெட் சுற்றுப் போட்டி இந்நிறுவனத்தின் பணிப்பாளர் அஷ்ரி ஆப்தீன் தலைமையில் பேருவளை நளீம் ஹாஜியார் மைதானத்தில் அண்மையில் இடம்பெற்றது.
ஓர் அணிக்கு 11 வீரர்கள் என்ற அடிப்படையில் 10 அணிகள் களமிறங்கிய இச் சுற்றுப் போட்டியில், சிறப்பாகத் துடுப்பெடுத்தாடி Legend Challengers மற்றும் Legend Super Kings அணியினர் இறுதிச் சுற்றுக்குத் தெரிவாகினர்.
இதில் முதலாம் இடத்தினைப் பெற்று, ஆசிரியர் ஸர்ஹான் தலைமையில் விளையாடிய Legend Challengers அணியினர் வெற்றிக் கிண்ணத்தைத் தம் வசப்படுத்திக் கொண்டனர். மேலும், இரண்டாம் இடத்தினை ஆசிரியர் அஸ்வின் தலைமையில் விளையாடிய Legend Super Kings அணியினர் பதிவு செய்தனர்.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக இலங்கை இளைஞர் பாராளுமன்ற வெளிவிவகார பிரதி அமைச்சர் அஹமட் சாதிக், மற்றும் கௌரவ அதிதியாக மனித உரிமை அமைப்பின் உறுப்பினரும் தேசிய இளைஞர் சேவை கவுன்சில் உறுப்பினரும் இளைஞர் பாராளுமன்ற வேட்பாளருமான இஸ்திபிஷார் நஸீர், The Legend College நிறுவனத்தின் தலைவர் அஷ்ரி ஆப்தீன், Physiotherapy வைத்தியர் ஹஸ்னா, RJ MEDIA வின் பணிப்பாளர் அறிவிப்பாளர் ஏ.எம். இன்ஸாப் மற்றும் உயர்பீட உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்ததோடு ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் எனப் பலரும் வருகை தந்திருந்தனர்.
இதன்போது மாணவர்களுக்கான சான்றிதழ் மற்றும் கிண்ணம் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது.
இந்நிறுவனமானது மாணவர்கள் மத்தியில் சிறந்த கல்வியினை வழங்கி வருவதோடு மாத்திரம் நின்று விடாது, மாணவர்கள் மத்தியில் காணப்படும் திறமைகளை இனங்கண்டு அவர்களுக்கிடையில் பல்துறைசார் விருத்தியினை மேற்கொண்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.