சர்வதேச இளைஞர் தினத்தை முன்னிட்டு... 'வன்முறை தீவிரவாதத்தைத் தவிர்ப்போம்' அக்கரைப்பற்றில் செயலமர்வு

zahir
By -
0


(சியாத்.எம்.இஸ்மாயில்)

சர்வதேச இளைஞர் தினத்தை முன்னிட்டு, தேசிய சமாதான பேரவையுடன் அட்டாளைச்சேனை அபிவிருத்தி சமூகம் இணைந்து அம்பாறை மாவட்ட இளைஞர், யுவதிகளுக்காக இடம்பெற்ற 'வன்முறை  தீவிரவாதத்தைத் தவிர்ப்போம்' எனும் தொனிப்பொருளில் அமைந்த செயலமர்வு அக்கரைப்பற்றில்  நடைபெற்றது.

அட்டாளைச்சேனை அபிவிருத்தி சமூகத்தின் செயலாளர் ஐ.எல்.ஹாசிம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அதிதியாக அக்கரைப்பற்று வலயக்கல்வி அலுவலகத்தின் சமாதானக்கல்வி இணைப்பாளர் எஸ்.எம். றுமைஸ் மற்றும் வளவாளர்களாக அம்பாறை மாவட்ட செயலகத்தின் சகவாழ்வு உத்தியோகத்தர் பி. பிரதீஸ்கரன், ஆசிரியை எம்.எச்.ஜிப்ரியா, கே.எம். பியோமி ரெட்டிகோ, எஸ்.எல்.முஹம்மட் நாசீம் ஆகியோர் கலந்து கொண்டு வன்முறைத் தீவிரவாதத்தை தடுப்பதில் இளைஞர் யுவதிகளின் திறனை விருத்தி செய்ய அறிவுரை வழங்கினர்.

இதன்போது வன்முறை தீவிரவாதத்தின் வரைவிலக்கணம், வன்முறை தள்ளுதல், வன்முறைத் தீவிரவாத்தின் பால் கவரும் காரணங்கள், போன்ற தலைப்புகளில் குழுக்களாகப் பிரிக்கப்பட்டு விரிவுரைகள் நடைபெற்றன. 

எதிர்காலத்தில் மாவட்ட இளைஞர் சம்மேளனத்துடன் இணைந்து வன்முறைத் தீவிரவாதத்தை தடுப்பதற்கு பல நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாக அட்டாளைச்சேனை அபிவிருத்தி சமூகத்தின் செயலாளர் ஐ.எல்.ஹாசிம் தெரிவித்தார். 

இதில் அம்பாறை மாவட்ட இளைஞர் சம்மேளன மற்றும் சகவாழ்வு சங்கங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட இளைஞர்கள் பங்குபற்றியிருந்தனர்.



கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)