இந்திய வீர விருது பெற்றார் ஊடகவியலாளரும் பல்துறைக்கலைஞருமான எம்.எஸ்.எம். ஸாகிர்

zahir
By -
0


(சியாத் எம். இஸ்மாயில்)

சாய்ந்தமருதைச் சேர்ந்த ஊடகவியலாளரும் பல்துறைக்கலைஞருமான எம்.எஸ்.எம்.ஸாகிர் இந்தியாவின்  'இரா. நல்லகண்ணு' வீர விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவின் சுதந்திர தின (ஆகஸ்ட் - 15) விழாவினை முன்னிட்டு, திண்டுக்கல் பசுமை வாசல் பவுண்டேஷன், குமரி மாவட்ட தமிழ்நாடு பனைமரம் காக்கும் பாதுகாப்பு இயக்கம், சேலம் மாவட்ட ஆத்தூர் ஸ்ரீ சக்ஸஸ் அகடமி & பவுண்டேஷன் திருச்சிராப்பள்ளி வீரமங்கை சமூக சிந்தனை அறக்கட்டளை ஆகிய அமைப்புகள் இணைந்து நடாத்திய பல்துறை சாதனையாளர்களுக்கான 'தேசத்தின் வீர விருதுகள்- 2022' வழங்கும் நிகழ்வில் இலக்கியத்துறையில் ஆற்றிவரும் சிறந்த பங்களிப்புக்காக, இலங்கையிலிருந்து கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்தில் சாய்ந்தமருது எனும் ஊரைச் சேர்ந்த ஊடகவியலாளரும் பல்துறைக்கலைஞருமான, முஹம்மது சகீது முஹம்மது ஸாகிர்,  இந்தியாவின் 'இரா. நல்லகண்ணு' வீர விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

எழுத்துத்துறையில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி, எழுதி வரும் இவரை, வாழ்த்துவதில் இலக்கிய சமூகம் மாத்திரமல்ல, இலங்கைத் திரு நாடும் பெருமை கொள்கிறது.



கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)