5 அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைப்பு!

zahir
By -
0


சதொசவில் பெற்றுக்கொள்ளக்கூடிய சில வர்த்தகப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனத்தின் தலைவர் பசந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

விலை குறைக்கப்பட்ட பொருட்கள் பின்வருமாறு....

* இறக்குமதி செய்யப்படும் பொன்னி சம்பா ஒரு கிலோ 194 ரூபாய்.

* ஒரு கிலோ பருப்பு 460 ரூபாய்.

* ஒரு கிலோ சிவப்பு சீனி 310 ரூபாய்.

* இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ நாட்டரிசி 198 ரூபாய்.

* ஒரு கிலோ நெத்தலி 1,375 ரூபாய் என குறிப்பிடப்பட்டுள்ளது.




கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)