கண்டியில் அமைந்துள்ள நட்சத்திர சொகுசு ஹோட்டல் திருமண வைபவத்தில் கலந்துகொண்ட 630 பேர் வைத்தியசாலைகளில் அனுமதி

Rihmy Hakeem
By -
0

 

அண்மையில் கண்டி அம்பிடிய பிரதேசத்தில் அமைந்துள்ள  ஆடம்பர நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்ற 03 திருமண வைபவங்களில் கலந்துகொண்ட 630 பேர் அரச மற்றும்  தனியார் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளதாக முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் ஹிதாயத் சத்தார் தெரிவித்தார்.

 அந்த சொகுசு நட்சத்திர ஹோட்டலின் தண்ணீர் தாங்கியில் (Stock Water Tank) ஒரு பெரிய விஷப் பாம்பொன்று பல நாட்களுக்கு முன்னர் விழுந்து அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பான செய்திகளின் உண்மைத்தன்மையை அம்பிடிய கங்கவட்டகோரளை பிரதேச சபை மூலமாக உறுதிப்படுத்திக் கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.

நட்சத்திர ஹோட்டல்களில் இவ்வாறு நடப்பதென்பது அவர்கள் எவ்வளவு தூரம் தமது வாடிக்கையாளர்கள் விடயத்தில்   அலட்சியமாக இருந்திருக்கிறார்கள் என்பதுடன் இது சம்பந்தமாக உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார். 

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)