பொதுஜன பெரமுனவின் தீர்மானத்திற்கு எதிராக செயற்பட்டவர்களை பதவிகளிலிருந்து நீக்க தீர்மானம்

Rihmy Hakeem
By -
0

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பதவி நிலைகளில் மாற்றம் மேற்கொள்ளப்படவுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர், சட்டத்தரணி சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

அடுத்த மாதம் நடைபெறவுள்ள கட்சி மாநாட்டின் போது பதவிநிலை மாற்றம் மேற்கொள்ளப்படவுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த காலத்தில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசியல் ரீதியாக மேற்கொண்ட  தீர்மானங்களுக்கு எதிராக செயற்பட்டு, தற்போது கட்சியில் முக்கிய பதவிகளில் வகிப்பவர்களை அந்தப் பதவிகளில் இருந்து நீக்கப்படுவதற்கான நடவடிக்கை  மாநாட்டில் மேற்கொள்ளப்படும் என சாகர காரியவசம் தெரிவித்தார். 

அண்மையில் பாராளுமன்றத்தின் மூலம் ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பின் போது ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிப்பதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீர்மானம் மேற்கொண்டிருந்தது. 

எனினும், கட்சியின் தவிசாளர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், பொருளாளர் டலஸ் அழகப்பெரும உள்ளிட்ட குழுவினர் கட்சியின் தீர்மானத்திற்கு எதிராக செயற்பட்டிருந்தனர்.

இரும்புத்திரை 

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)