'யுவான் வாங் 5' என்ற பெயரிலான சீனாவின் செயற்கைக்கோள் கண்காணிப்புக் கப்பலை ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நிறுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் இன்று (12) அனுமதி வழங்கியுள்ளது.
குறித்த கப்பலின் வருகையை எதிர்த்தமை தொடர்பில் உறுதியான காரணங்களை இந்திய மற்றும் அமெரிக்க அரசாங்கங்கள் தெரிவிக்கத் தவறியதை தொடர்ந்து இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.