தேசிய விளையாட்டு பேரவையின் புதிய தலைவராக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவினால் இந்த நியமனம் நேற்று (10) விளையாட்டுத்துறை அமைச்சில் வைத்து உத்தியோகபூர்வாக வழங்கப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சரான அர்ஜுன ரணதுங்க, இலங்கை கிரிக்கெட் சபையின் இடைக்காலக் குழுத் தலைவராக முன்னர் பணியாற்றியவர், எனினும், விளையாட்டுத்துறை அமைச்சின் உயர் பதவிக்கு அவர் நியமிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.
