ராஜபக்ஸ கள்வர் குடும்பம் வேண்டுமென்றே இனவாதத்தை உருவாக்கி நாட்டை ஏழ்மைக்கு ஆளாக்கியது - சஜித்

Rihmy Hakeem
By -
0

 தற்போதைய நெருக்கடிக்கு ராஜபக்ஸ குடும்பத்தின் சாபக்கேடான ஆட்சியே காரணம். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் தெரிவிப்பு.

ராஜபக்ஸ கள்வர் குடும்பம் வேண்டுமென்றே இனவாதத்தையும் மதவாதத்தையும் உருவாக்கி நாட்டை ஏழ்மைக்கு ஆளாக்கிய கொள்கையொன்றும் இல்லாதவாறு செயற்பட்டதாகவும் அவர்கள் இப்போதும் நாட்டின் அடுத்த ஆட்சியை தங்கள் மகன்கள் மற்றும் பேரப்பிள்ளைகளுக்கு வழங்கி நாட்டை அறுதியாக்கி ராஜபக்ஷ ஆட்சியில் கீழ் கொண்டுவர செயற்படுகின்றனர் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இன்று (25) களுத்துறையில் தெரிவித்தார்.

நம் நாட்டில் மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் ஏராளம்.தற்போது நிலவும் பாரிய பொருளாதார நெருக்கடி காரணமாக மீனவ சமூகத்தின் வாழ்வாதாரம் பாரிய அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளது .வாத்துவ பொதுப்பிட்டிய பிரதேச மீனவ மக்களை இன்று (25) சந்தித்தித்ததுடன் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும் விரிவாகக் கலந்துரையாடினர்.

ராஜபக்ஸ குடும்பத்தின் சாபக்கேடான ஆட்சியில் கோடீஸ்வரர்களுக்கு பெரும் வரிச்சலுகைகளை வழங்கி விவசாயிகளின் விவசாய உரிமைகளை இழக்கச் செய்து, உழைக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை அழித்ததனால் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பரிதாபகரமான தலைவிதியை எதிர்கொள்ள வேண்டியுள்ளது எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

2019 ஆம் ஆண்டு  ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி, வீரம், மனிதாபிமானம் என்ற பொய்யான வார்த்தைகளால் மக்களை ஏமாற்றி வாக்குகளைப் பெற்று, தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி நாட்டையே அழித்தார். இதன் பின்னர் இரண்டரை வருடங்களின் பின்னர் இலங்கையின் 22 மில்லியன் மக்கள் நாட்டுக்கு மனித நேயம் கொண்ட மக்கள் பிரச்சினைகளை புரிந்து கொண்ட ஆட்சியொன்று தேவை எனக் கூறினாலும் தற்போதைய ஆட்சியாளர்கள் அவ்வாறான மக்கள் விருப்பத்தை வழங்கவில்லை என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

போலியான வீரத்தை விட மனிதாபிமானத்தை தேர்ந்தெடுக்கும் காலம் வந்துள்ளதாகவும், தங்கி வாழும் மனநிலையை விட்டு வெளியேறி அனைவருக்கும் சிறந்ததான ஆட்சியொன்றைத் தெரிவு செய்ய வேண்டும் எனவும், அதற்கு தானும் தான் சார்ந்தவர்களும் தயாராக இருப்பதாகவும்  எதிர்கட்சி தலைவர் தெரிவித்தார்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)