இந்திய வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள எச்சரிக்கை..!

zahir
By -
0


இலங்கையில் தங்கியிருக்கும் இந்தியர்கள் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருக்கவேண்டுமென இந்திய வெளிவிவகார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

இந்திய வெளியுறவுத்துறையின் பேச்சாளர் அரிந்தம் பாக்சி, புதுடெல்லியில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போது இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளார்.

இலங்கையில் இந்தியர்களின் பாதுகாப்பை பாதிக்கும் சம்பவங்கள் குறித்து இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம் இலங்கையில் உள்ளுர் அதிகாரிகளுடன் தொடர்பில் உள்ளதாகவும், இது தொடர்பாக இந்திய குடிமக்களுக்கு வழிகாட்டுதலை வழங்கியுள்ளதாகவும் அரிந்தம் பாக்சி தெரிவித்துள்ளார்.

இந்திய குடிமக்கள் இலங்கையில் இருக்கும்போது கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருக்கவேண்டுமெனவும், எந்தவொரு அத்தியாவசியப் பயணத்திற்கும் நாணய மாற்றம் மற்றும் எரிபொருள் நிலைமை உள்ளிட்ட அனைத்து தொடர்புடைய காரணிகளையும் அவர்கள் ஆராய வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)