(அஷ்ரப் ஏ சமத்)
வீடமைப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சா் பிரசன்ன ரணதுங்கவின பணிப்பின் பேரில் பொது மக்கள் சந்திப்பு ஒவ்வொரு வாரத்தின் திங்கட்கிழமை செத்சிரிபாயாவில் உள்ள அவரது அமைச்சில் நடைபெற்று வருகின்றது.
இச் சந்திப்பின்போது ஒவ்வொரு திங்கட் கிழமையும் வீடமைப்பு நகர அபிவிருத்தி அமைச்சின் கீழ் வருகின்ற சகல நிறுவனங்களின் தலைவா்கள் , பொது முகாமையாளா்கள் அங்கு சமூகம் தந்திருக்க வேண்டும் எனவும் நிறுவனங்களின் தலைவா்கள் தமது பொது மக்கள் சந்திப்பினை புதன் கிழமைகளில் வைத்துக் கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளாா். நாட்டின் நாலா பாகத்தில் இருந்தும் வீடமைப்பு, நகர அபிவிருத்தி, கட்டிடங்கள், பொறியற் கூட்டுத்தாபணம், தொடா்மாடி முகாமைத்துவம் பற்றிய பிரச்சினைக்கான ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் தமது மனுக்களுடன் அமைச்சிற்கு வருகை தருகின்றனா். இப் பொது மக்களது பிரச்சினைகளுக்கு உடன் தீா்வைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் எனவும் ்சகல அதிகாரிகளும் அமைச்சில் பிரசன்னமாயிருத்தல் வேண்டும் எனவும் அதிகாரிகளைப் பணித்துள்ளாா்.
கடந்த திங்கட் கிழமை நடைபெற்ற பொதுமக்கள் சந்திப்பின்போது பாராளுமன்ற உறுப்பிணா் வாசுதேவ நாணயக்காவும் பொதுமக்கள் போன்று நுகேகொடைவாழ் மக்களது வீட்டுப் பிரசசினைகளைத் தீா்த்துவைப்பதற்காக செத்சிரிபாயவில் வருகை தந்திருந்தாா். அவரது பிரச்சினைகளை அமைச்சா் பிரசன்ன ரணதுங்கவினால் கவணத்திற்கு எடுக்கப்பட்டு தனது அமைச்சின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு அப்பிரச்சினைகளுக்கு தீர்வு உடனடியாக எடுக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.