(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
கல்முனை லெஜன்ஸ் விளையாட்டு கழகம் நடாத்துகின்ற ரீ20 தொடரின் இரண்டாம் சுற்று ஆட்டத்தில் சாய்ந்தமருது பிரேவ் லீடர்ஸ் விளையாட்டு கழகத்தை எதிர்த்தாடிய மருதமுனை மரு கெப்பிடல் விளையாட்டு கழகம் வெற்றி வாகை சூடியது.
கல்முனை சந்தாங்கேணி மைதானத்தில் (18) இடம்பெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மரு கெப்பிடல் அணி முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 10 விக்கட் இழப்பிற்கு 128 ஓட்டங்களைப் பெற்றனர்.
பதிலளித்தாடியே சாய்ந்தமருது பிரேவ் லீடர்ஸ் விளையாட்டு கழகத்தினர் 18.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 114 ஓட்டங்களைப் பெற்றனர். இதன் அடிப்படையில்14 ஓட்டங்களால் மரு கெப்பிடல் அணி வெற்றி பெற்று கால் இறுதி போட்டிக்குத் தெரிவானது.