காத்தான்குடி கடற்கரையில் இன்று (22) திங்கட்கிழமை அதிகாலை எழுந்த பாரிய கடல் அலையினால் புதிய காத்தான்குடி ஏத்துக்கால் கடற்கரையிலுள்ள சிற்றுண்டிச்சாலையொன்றின் பின் பகுதி சேதமடைந்துள்ளது.
புதிய காத்தான்குடி ஏத்துக் கால் கடற்கரையில் அதிகாலை 4 மணியளவில் பாரிய கடல் அலை எழுந்துள்ளது. இதனால் அப் பகுதியிலுள்ள சிற்றுண்டிச்சாலையின் பின் பகுதி சமையலறை சேதமடைந்துள்ளது.
இதனால் கடற்கரையிலுள்ள சில மீன்பிடி படகுகளும் மீனவர்களினால் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. கடல் அலையும் அதிகமாக காணப்பட்டதுடன் அப்பகுதியில் கடலரிப்பும் ஏற்பட்டுள்ளது.