கொரோனா தொற்றுக்கான இரண்டாவது பூஸ்டர் தடுப்பூசி குறித்து பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை

  Fayasa Fasil
By -
0


கொரோனா தொற்றுக்கான இரண்டாவது பூஸ்டர் தடுப்பூசி  குறித்து பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என  தொற்று நோயியல் நிபுணர்  வைத்தியர் சமித கினிகே தெரிவித்துள்ளார்.

இரண்டாவது பூஸ்டர்  தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டவர்கள் ஒவ்வாமை மற்றும் காய்ச்சல் போன்ற நோய்களுக்கு உள்ளாகி வருவதாக பரப்படும் செய்திகள்  உண்மைக்கு புறம்பானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இதுவரையில் 82 ஆயிரத்து 238 பேர் இரண்டாவது பூஸ்டர் தடுப்பூசிகளை  பெற்றுக் கொண்டுள்ளதாக தொற்று நோயியல் நிபுணர்  வைத்தியர் சமித கினிகே தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில் பொது மக்கள் அச்சம் கொள்ளாமல்   பூஸ்டர் தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ளுமாறு  பொது மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை  நாட்டில் இது வரையிலான காலப்பகுதியில் 80 இலட்சத்து 60 ஆயிரத்து 993 பேர் முதலாவது பூஸ்டர் தடுப்பூசிகளைப் செலுத்திக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)