இலங்கையின் கிராமிய பொருளாதாரத்தை கட்டியெழுப்பிய மாபெரும் கரம் கூட்டுறவு சங்கங்களே

  Fayasa Fasil
By -
0

கூட்டுறவு சங்கங்களுக்கு பாதகமான எந்த நடவடிக்கையையும் மாகாண ஆளுநர்கள் எடுக்கக்கூடாது என பிரதமர் தினேஷ் குணவர்தன அறிவுறுத்தியுள்ளார்.

கொழும்பில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் மாகாண ஆளுநர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு அறிவுறுத்தியுள்ளார்.

இலங்கையின் கிராமிய பொருளாதாரத்தை கட்டியெழுப்பிய மாபெரும் கரம் கூட்டுறவு சங்கங்களே என்றும் அவர் கூறியுள்ளார்.

அவர் மேலும் கூறியதாவது,

“ஒவ்வொரு மாகாண சபையிலும் உள்ள தகவல் மற்றும் ஆதாரங்கள் கூட்டுறவுச் சங்கங்கள் அழியும் நிலைக்கு மாறிவிட்டதை நிரூபிக்கின்றன. கூட்டுறவு சங்கங்களில் இருப்பது அரச அதிகாரிகள் அல்ல. அவர்கள் கிராமத்தின் உறுப்பினர்கள். அவர்களுக்கு அதிகாரிகள் பலம் கொடுக்க வேண்டும். இவ்வாறான சங்கங்களை பலப்படுத்தி கூட்டுறவு சங்கங்கள் மீண்டும் எழுச்சி பெற, பின்தங்கியுள்ள அடையாளம் காணப்பட்ட அம்சங்களை செயற்படுத்த வேண்டும். கூட்டுறவு ஆணையாளர்கள் உட்பட ஒவ்வொரு அதிகாரிகளும் உடனடியாக இதற்காக பணியாற்ற வேண்டும். ஒரு காலத்தில் கிராமப் புறப் பொருளாதாரத்தின் இருதயமாக இருந்த கூட்டுறவு சங்கங்களுக்கு உங்களால் முடிந்தவரை வலுவைக் கொடுக்க முயற்சி செய்யுங்கள், அதை முறியடிக்க உதவாதீர்கள்” என்றார்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)