(ஹஸ்பர்)
இந்திய தமிழ்நாட்டு அரசினால் வழங்கப்பட்ட மனிதாபிமான மூன்றாம் கட்ட உதவி தம்பலகாமம் பிரதேச செயலகப் பிரிவிலும் வழங்கப்பட்டன.
தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி; வேண்டுகோளிற்கிணங்க தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு இன்று (23) வழங்கப்பட்டன.
இதில் அரிசிப் பொதி என்பன விசேட தேவையுடையோர்கள் காத்திருப்பு பட்டியலில் உள்ளோருக்கும் சிறுநீரக நோய், இருதய நோய் கொடுப்பனவு மற்றும் காத்திருப்பு பட்டியலில் உள்ளோர் உள்ளடங்களாக நிவாரணப் பணிகள் இடம்பெற்றன.
பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக இந்த மனிதாபிமான உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
நிகழ்வில்; சமூக சேவை உத்தியோகத்தர் ப.சுதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.