மின்சார முச்சக்கர வண்டிகளை பதிவு செய்வதற்கான மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
மசகு எண்ணெய் ஊடாக பெறப்படும் எரிபொருட்களைப் பயன்படுத்தாமல் மின்சார சக்தியில் இயங்கும் வாகனங்களை பிரபலப்படுத்தும் நோக்கில் இலங்கையில் மின்சார முச்சக்கர வண்டிகளைப் பயன்படுத்துவதற்கு சந்தர்ப்பம் வழங்குமாறு பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
மோட்டார் வாகனச் சட்டத்தில் தேவையான விதிமுறைகள் இல்லாததால், மேற்படி சட்டம் இவ்வாறு திருத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பான முன்மொழிவு போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரினால் முன்வைக்கப்பட்டுள்ளதுடன் அதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.