பரிவும், தட்டிக் கொடுத்தலும், பாராட்டும் - நலீபா ரிஹ்மி (உளவியல் எழுத்தாளர் )

  Fayasa Fasil
By -
0


அன்பு எங்கு ஊற்றெடுக்கும் தெரியுமா.. பரிவும், தட்டிக் கொடுத்தலும், பாராட்டும் எந்த  இடத்தில் ஊற்றெடுக்குமோ அந்த இடத்தில்   தான் அன்பும், நேசமும் பெருக்கெடுக்கும்.. வெறுப்பை சம்பாதிப்பது எளிது.. ஆனால் அன்பை சேகரிப்பது கஷ்டம்.. ஆனால் இஷ்டப்பட்டு செய்யும் எந்தக் காரியமும் அன்பின் பிறப்பிடமாக காணப்படும்.
நாம் செய்யும் செயலை ஒருவர் பாராட்டினால் நம் மனதில் ஏற்படும் மகிழ்ச்சியே தனி இன்பம் தான். சிறு குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பாராட்ட வேண்டும் என எதிர்ப்பார்க்கின்றனர். ஒருவரின் செயலைப் பாராட்ட பரிசுப்பொருளோ உயர்பதவிகளோ தேவையில்லை. அன்பாகத் தட்டிக் கொடுங்கள் அதுவே போதுமானது. நான்கு வயது குழந்தை ஒரு படம் வரைந்தால் உடனே அக்குழந்தையைப் பாராட்டுங்கள்

ஒருவரைப் பாராட்ட வேண்டும் என்று நினைத்தால் தாமதிக்காமல் பாராட்டுங்கள். அதுவெறும் வார்த்தைகள் அல்ல. அந்தப் பாராட்டுகள் அவர்களுக்கு புது உற்சாகத்தையும் தைரியத்தையும் அளிக்கும். மேன்மேலும் பாராட்டுக்கள் பெறுவதற்கு மனது துடிக்கும். அதனால் தனது செயல்களில் வெற்றிப் பெற மும்முரமாக ஈடு படுவார்கள். அன்பு என்ற ஒன்று தான் அனைவரும் எதிர்ப்பார்ப்பது. சின்ன முயற்சியாக இருந்தாலும் பெரியதாக இருந்தாலும் அம்முயற்சியைப் பாராட்டுங்கள்.
அன்பு ஈனும் ஆர்வம் உடைமை அது ஈனும் நண்பென்னும் நாடாச் சிறப்பு என்ற வள்ளுவரின் வாக்கிற்கேற்ப அன்பு ஒன்றே மனிதனிடத்தில் ஆர்வம் உண்டாக்கும். அதனால் முடிந்தவரை மற்றவரைப் பாராட்டுங்கள். மற்றவர்கள் உங்களிடம் எதிர்ப்பார்ப்பது பாராட்டு மட்டுமே.  வகுப்பில் மாணவர் நற்கருத்துகளைக் கூறினால் அவர்களைப் பாராட்டுங்கள்.

உங்கள் அன்பானவர்களையும் இவ்வாறு தட்டிக் கொடுத்து உட்சாக மூட்டுங்கள்........

பாத்திமா நலீபா
உளவியல் எழுத்தாளர் ✍️

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)