கல்முனை மாநகர சபையில் முக்கிய பதவிகள் வகித்த சிலர் அதிரடி இடமாற்றம்; கடமைகளைப் பொறுப்பேற்றார் அஸ்மி!

zahir
By -
0


மந்தகதியில் இயங்கி வந்த கிழக்கு மாகாண கூட்டுறவுத் திணைக்களத்தை மிகக் குறுகிய காலத்தில் சிறப்பாக இயங்க வைத்து, மாகாண கூட்டுறவுத் திணைக்களம் ஒன்றுள்ளது என்பதை முழு மாகாணத்திற்குமே பிரகாசிக்கச் செய்த இலங்கை நிர்வாக சேவை தரம் ஒன்றை சேர்ந்த ஏ.எல்.எம்.அஸ்மி  கல்முனை மாநகர சபைக்கு புதிய ஆணையாளராக நியமிக்கப்பட்டு இன்று (12) தனது கடமைகளைப் பொறுப்பேற்றார். 

குறிப்பாக, அக்கரைப்பற்று மாநகர சபையில் மிக நீண்ட காலமாக ஆணையாளராக பணியாற்றி, 
தனது பணியை சிறப்பாகச் செய்தவராவார்.

இவர் எங்கு சென்றாலும் தனது பணியினை நேர்த்தியான முறையில் வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்லும் ஒருவராக இருந்து வருகிறார். அதேபோல், கல்முனை மாநகரம் மிக குறுகிய காலத்துக்குள் மிகச் சிறப்பாக இயங்க வைப்பார் என்று கல்முனை மாநகர மக்கள் எதிர்பார்த்து தங்களின் வாழ்த்துக்களையும் தெரிவிக்கின்றனர்.

கல்முனை மாநகர சபையில் முக்கிய பதவிகளில் இருந்த சிலர் அதிரடியாக இடமாற்றப்பட்டதன் பின்னர் தனது கடமைகளைப் பொறுப்பேற்றமையும் குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)