எதிர்காலத்தில் பயங்கரவாத தடைச் சட்டத்தை இரத்துச் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் (23) அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தற்போது புதிய தேசிய பாதுகாப்பு சட்டம் தயாரிக்கப்பட்டு வருவதாகவும், அந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டவுடன் பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்படும் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

