அமைச்சுப்பதவிகளை வழங்கும் போது அதிக உறுப்பினர்களை (பாராளுமன்றத்தில்) கொண்டுள்ள கட்சி என்ற வகையில் தமது கட்சிக்கு உரிய பதவிகள் விகிதாசாரத்தின் அடிப்படையில் கட்டாயம் வழங்கப்பட வேண்டும் என்று ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளது.
இதனை கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.