வாட்ஸ் அப் அறிமுகப்படுத்தியுள்ள புதிய அப்டேட்

  Fayasa Fasil
By -
0


வாட்ஸ்அப் செயலி உலகம் முழுவதும் பயன்படுத்தும் பிரபலமான செயலியாக உள்ளது. இளைஞர்கள் முதல் வயதானவர்கள் வரை வாட்ஸ்அப் பயன்படுத்துகின்றனர். அந்த அளவிற்கு பயனர்களை ஈர்த்துள்ளது. காரணம், இது மிகவும் எளிதாக பயன்படுத்த கூடிய ஒன்றாக (user friendly) உள்ளது. தகவல்களை எளிய முறையில் மற்றவர்களுக்கு அனுப்பும் படியாகயும் உள்ளது. அதனால், இந்த செயலியை ஏராளமானோர் பயன்படுத்துகின்றனர்.

ரூப் சாட், இமோஜி, ஸ்டிக்கர் எனப் பல அம்சங்கள் பயனர்களை கவர்ந்துள்ளது. அந்தவகையில் தற்போது வாட்ஸ்அப் நிறுவனம் புதுவித அம்சங்களுடன் அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதாவது வாட்ஸாப் நிறுவனம் கடந்த 2017ல் அறிமுகப்படுத்திய Delete For Everyone ஆப்சன் மூலம் இரண்டு மணி நேரத்திற்கு முன்னதாக அனுப்பிய மெசேஜ்களை நீக்க முடிந்தது. இனிமேல் இரண்டு நாட்கள் மற்றும் 12 மணி நேரம் வரை Delete For Everyone ஆப்சன் மூலம் மெசேஜ்களை நீக்கும் வசதியை வாட்ஸாப் நிறுவனம் கொண்டுவந்துள்ளது.

இந்த வசதியை ஆன்ட்ராய்ட் மற்றும் iOS இரண்டிலும் மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் வாட்ஸ்அப் பாவனையாளர்கள் கொடுக்கும் தகவல்களைப் பாதுகாக்க உதவும் நோக்கத்தில் இன்னும் பல அம்சங்களையும் அறிமுகப்படுத்தியுள்ளது.

பாவனையாளர்கள் வாட்ஸாப் குழு ஒன்றிலிருந்து ஏனைய உறுப்பினர்களுக்கு காட்சிப்படுத்தாமல் மிகவும் அமைதியாக விட்டுவிட வெளியேறவும் முடியும்

ஒரு பாவனையாளர் ஒன்லைனில் இருக்கும்போது அவர் ஒன்லைனில் இருப்பதை யார் பார்க்கலாம் என்ற கட்டுப்பாடுகளையும் இனி அமைக்கலாம்.

“ஒருமுறை பார்க்கவும்” அம்சத்தைப் பயன்படுத்தி செய்திகள் அனுப்பப்படும்போது ஸ்கிரீன் ஷாட்களை எடுப்பதைத் தடுக்கும் முடியும்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)