சீன இராணுவ கப்பலுக்கு தடை விதித்து, பாகிஸ்தான் இராணுவ கப்பலுக்கு அனுமதி வழங்கியுள்ளமை வெளிவிவகார கொள்கையின் பிரித்தாளும் தன்மையை வெளிப்படுத்தியுள்ளது. தவறான வெளிவிவகார கொள்கையை அரசாங்கம் திருத்திக் கொள்ள வேண்டும். சீனா, இந்தியா ஆகிய இரு நாடுகளும் இலங்கைக்கு முக்கியமானவை. சர்வதேச உறவை சிறந்த முறையில் முகாமைத்துவம் செய்யாவிடின் பொருளாதார நெருக்கடி மேலும் தீவிரமடையும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சபையில் வலியுறுத்தினார்.
நாடாளுமன்றில் இன்று (10) இடம்பெற்ற ஜனாதிபதியின் கொள்கை உரை மீதான சபை ஒத்திவைப்பு விவாதத்தின் போது சிறப்பு கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
