ஒன்றிணைந்து குழுவாக காலி முகத்திடல் போராட்டக்களத்திலிருந்து வெளியேறுவதற்கு தாம் தீர்மானித்துள்ளதாக சட்டத்தரணி மனோஜ் நாணாயக்கார அங்கு இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
எனினும் போராட்டம் முடிவடையவில்லை எனவும் பிரதேச மற்றும் நகரங்களை அடிப்படையாக கொண்டு போராட்டங்களை வலுப்படுத்த எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

