இன்றும் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமையும் (14) மின்வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது என பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க தெரிவித்தார்.
இதேவேளை, 12 மற்றும் 13 ஆம் திகதிகளில் ஒரு மணித்தியால மின்வெட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டதாகவும் அதன்படி 20 வலயங்களிலும் மாலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை தலா 30 நிமிடங்களுக்கு இரண்டு தடவைகள் ஒரு மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
