நாட்டில் கொரோனா வீதம் அதிகரிப்பு: ஒன்று கூடுவதைத் தவிர்க்குமாறு வேண்டுகோள்

zahir
By -
0


நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 227 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்பு பிரிவு குறிப்பிட்டுள்ளது.


குறித்த 227 பேரும் நேற்றைய நாளில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும், கடந்த இரண்டு நாட்களாக இருநூறுக்கும் அதிகமான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர்.

இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றினால்  மேலும் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

சுகாதார பணிப்பாளர் நாயகம்  வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில்  குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கடந்த சில நாட்களாக அதிகளவான நபர்கள் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி, பாடசாலைகள், அலுவலகங்கள் மற்றும் பொதுமக்கள் ஒன்று கூடும் இடங்களில் கொரோனா வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகளுடன் அடையாளம் காணப்படுவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, பொதுமக்கள் ஒன்று கூடுவதைத் தவிர்த்து செயற்படுவதோடு, பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைப்பிடிக்குமாறும் சுகாதார பணிப்பாளர் நாயகம்  கோரிக்கை விடுத்துள்ளார்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)