லுணுகல பிரதேசத்தில் கடத்தப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த சிறுமியை பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அதிகாரிகள் குழுவொன்று மீட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
14 வயது சிறுமி ஒருவரே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளார்.
கடந்த 3 ஆம் திகதி இந்த சிறுமி கடத்தப்பட்டதாக தெரியவந்துள்ளதுடன், லுணுகல பொலிஸாரின் அறிவித்தலுக்கு அமைய பசறை மற்றும் லுணுகல பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் இந்த கூட்டுச் சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.
இதன்படி, கடத்தப்பட்ட சிறுமி மற்றும் சிறுமியை கடத்திய சந்தேக நபர்கள் இருவரும் லுணுகல உடகிருவ காட்டில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
லுணுகல மற்றும் பேருவளை பிரதேசத்தில் வசிக்கும் 18 வயது மற்றும் 53 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிறுமி லுனுகல பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக லுணுகல பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
