எரிபொருள் வரிசையில் விஷமிகள் நாசகார செயல்

  Fayasa Fasil
By -
0


யாழ்ப்பாணத்தில் எரிபொருள் வரிசையில்  அடுக்கி விடப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளின் ஒயில் தாங்கியினுள் விஷமிகள் மண்ணை அள்ளிக் கொட்டியுள்ள சம்பவம் பதிவாகியுள்ளது.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

யாழ். நகர் மத்தியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் எரிபொருளை பெற்றுக்கொள்ளும் நோக்குடன் மோட்டார் சைக்கிள்களை அதன் உரிமையாளர்கள் வரிசையில் அடுக்கி வைத்துள்ளனர்.

அவ்வாறு இளைஞர் ஒருவரும் தனது பெறுமதி மிக்க நவீன ரக மோட்டார் சைக்கிளை எரிபொருளுக்கான வரிசையில்  நிறுத்தி விட்டு இரவு வீடு சென்றுள்ளார்.

மறுநாள் காலை எரிபொருள் விநியோகிக்கும் போது, வரிசையில் நின்று தனது மோட்டார் சைக்கிளுக்கு எரிபொருளை நிரப்பியுள்ளார்.

எரிபொருளை நிரப்பிய பின்னர் மோட்டார் சைக்கிளை இயக்கி ஓடிய போது அதன் இயந்திர சத்தம் மாற்றம் அடைந்து வித்தியாசத்தை உணர்ந்துள்ளார்.

அதனை அடுத்து அவர் தனது மோட்டார் சைக்கிளை திருத்தகத்திற்கு கொண்டு சென்று சோதனை செய்த போதே , மோட்டார் சைக்கிளின் ஓயில் தாங்கியினுள் விஷமிகள் மண்ணை அள்ளிப் போட்டிருந்தமை தெரிய வந்துள்ளது.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)