(இஸட்.ஏ.றகுமான்)
அக்கரைப்பற்று பிரதேச செயலாக சமுர்த்திப் பிரிவின் 2021ஃ2023 கல்வியாண்டுக்கான புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு அக்கரைப்பற்று சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் எம்.பி.எம்.ஹுசைன் தலைமையில் பிரதேச செயலக பிரதான கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில், பிரதம அதிதிகளாக அம்பாறை மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளர் எம்.எஸ்.சப்றாஸ் மற்றும் பிரதேச செயலாளர் ரி.எம்.எம். அன்சார், அதிதிகளாக உதவிப் பிரதேச செயலாளர் கே.றொசின்தாஸ், அக்கரைப்பற்று சமுர்த்தி பிராந்திய கணக்காய்வு அலகின் நிலையப் பொறுப்பதிகாரி இஸட்.ஏ.றஹ்மான் மற்றும் பாடசாலை அதிபர்கள், சமுர்த்தி திட்ட முகாமையாளர் என்.மசூர், சமுர்த்தி வங்கி முகாமையாளர் யூ.எல்.நழீம், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் (சமுகப் பாதுகாப்பு) எஸ்.எம்.அமீன், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களம் சமுர்த்தி பெறும் பயனுகரிகளின் கல்விப் பொதுத்தராதர சாதாரண பரீட்சையில் (GCE O/L) சித்தியடைந்து கல்விப் பொதுத்தராதர உயர்தரம் (GCE A/L) கற்கும் மாணவப் பிள்ளைகளுக்காக சமுர்த்தி சிப்தொற புலமைப்பரிசிலினை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.